கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

துணிக்கடை, நகைக்கடை மற்றும் உணவக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் - மாநகராட்சி ஆணையர்

துணிக்கடை, நகைக்கடை மற்றும் உணவக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். நாளை மறுநாள் முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவும், துணிக்கடை, நகைக்கடை மற்றும் உணவக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும்படி கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கடை உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சென்னையில் முக கவசம் அணியாமல் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என்று ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்