தமிழக செய்திகள்

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் கேட்டு கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் கேட்டு கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தினத்தந்தி

தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் சென்னித்துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாதிக்அலி முன்னிலை வகித்தார். இதில் மாநில பெதுச்செயலாளர் பிச்சைவேல், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், நிர்வாகிகள் ஜெயசீலன், சக்திவேல், பிச்சைமுத்து, கூட்டுறவு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சங்கமாக மாற்றும் முடிவை கைவிடவேண்டும். மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் தீபாவளி பேனசாக ரூ.8,400 வழங்க வேண்டும். பொதுவினியோக திட்டத்துக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து