தமிழக செய்திகள்

கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞசையில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜீவ் பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்புச்செல்வன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் சந்தான லட்சுமி, முன்னாள் மாநில பொருளாளர் கோவிந்தராசு, வட்ட தலைவர் அன்புச்செல்வி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் அஜய்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின், மாநில மைய முடிவின்படி, செங்கல்பட்டு கூட்டுறவுத்துறை வீட்டு வசதி பிரிவு இணைப் பதிவாளரின் ஊழியர் விரோதப்போக்கை கண்டித்தும், அலுவலக வளாகத்தில் கண்ணியமற்ற முறையில் ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகராட்சி, மாநகராட்சி சங்கங்களின் கூட்டமைப்பின் தஞ்சை மண்டல பொறுப்பாளர் மூர்த்தி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தங்கராம் நன்றி கூறினார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு