தமிழக செய்திகள்

ரூ.3¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்தி வேலூரில் ரூ.3¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

தினத்தந்தி

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 123 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.89-க்கும், சராசரியாக ரூ.76.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 993-க்கு ஏலம் போனது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரத்து 659 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.99-க்கும், குறைந்த பட்சமாக ரூ.58.99-க்கும், சராசரியாக ரூ.81.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 790-க்கு ஏலம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்