தமிழக செய்திகள்

ரூ.9 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.9 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.

தினத்தந்தி

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. கடந்த வாரம் வியாழக்கிழமை 10 ஆயிரத்து 457 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.82.89-க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.10-க்கும், சராசரியாக ரூ.78.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 99 ஆயிரத்து 450-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 12 ஆயிரத்து 149 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.11-க்கும், குறைந்த பட்சமாக ரூ.57.19-க்கும், சராசரியாக ரூ.80.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து 18 ஆயிரத்து 317-க்கு விற்பனையானது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை