தமிழக செய்திகள்

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்...!

தேங்காய் நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து உள்ளது.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 45). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அடுத்த பன்னிஹள்ளி பகுதியில், கடந்த 3 ஆண்டுகளாக நார் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று இரவு, 11:00 மணியளவில் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் வெளியே வந்து டீ குடித்துள்ளனர்.

அப்போது தொழிற்சாலைக்குள் இருந்த நார்களில் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிறிது நேரத்தில் தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பற்றி எரிந்தது. தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு கிருஷ்ணகிரி, பாலக்கோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை

அணைத்தனர்.

ஆனால் தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள், நார் மற்றும் கயிறுகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாயின. இதன் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்