தமிழக செய்திகள்

கொங்கணாபுரத்தில் தேங்காய் பருப்பு ரூ.5¼ லட்சத்துக்கு ஏலம்

கொங்கணாபுரத்தில் தேங்காய் பருப்பு ரூ.5¼ லட்சத்துக்கு ஏலமிடபட்டது.

தினத்தந்தி

எடப்பாடி

கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற தேங்காய் பருப்பு பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த 165 மூட்டை தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டன. இதில் ஆதார விலை திட்டத்தின் கீழ் தேங்காய் பருப்புகள் கிலோ ஒன்றுக்கு 108 ரூபாய் 60 பைசா என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலா) ரூ.7 ஆயிரத்து 75 முதல் ரூ.7 ஆயிரத்து 590 வரை விற்பனையானது. இரண்டாம் ரக தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 575 முதல் ரூ.7 ஆயிரத்து 65 வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு, இரண்டாம் ரக தேங்காய் பருப்புகளுக்கு சற்றே கூடுதலான விலை கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். நாள் முழுவதும் நடைபெற்ற ஏலத்தில் ரூ.5 லட்சத்து 35 ஆயிரத்து 31 மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து