தமிழக செய்திகள்

தேங்காய் பறிக்க முயன்ற போது முறிந்து விழுந்த தென்னை மரம் - டிரைவர் பலி

பரங்கிப்பேட்டை அருகே தேங்காய் பறிக்க மரத்தில் ஏறியபோது தென்னை மரம் முறிந்ததில் கீழே விழுந்து டிரைவர் பலியானார்

தினத்தந்தி

கடலூர்

பரங்கிப்பேட்டை அருகே உள்ள தோப்பிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் திருப்பதி (வயது 27). டிரைவரான இவர் நேற்று காலை தேங்காய் பறிப்பதற்காக தனது வீட்டின் அருகே உள்ள ஒரு தென்னை மரத்தில் ஏறினார்.

அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக தென்னை மரம் திடீரென முறிந்து கீழே விழுந்தது. அப்போது மரத்துடன் கீழே விழுந்ததில் திருப்பதி பலத்த காயமடைந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயமடைந்து உயிருக்கு போராடிய திருப்பதியை மீட்டு சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் திருப்பதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினா. இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுனிதா, சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தேங்காய் பறிக்க மரம் ஏறியபோது, தென்னைமரம் முறிந்து விழுந்ததில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து