தமிழக செய்திகள்

வத்தலக்குண்டுவில் விலை வீழ்ச்சியால் தேங்காய்கள் தேக்கம்

வத்தலக்குண்டுவில் விலை வீழ்ச்சியால் தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன.

தினத்தந்தி

வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தெழிலாக உள்ளது. சமீப காலமாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது மொத்த விற்பனையில் ஒரு தேங்காய் ரூ.6 முதல் ரூ.8 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பலரும் கூடுதல் விலையை எதிர்பார்த்து தேங்காய்களை தங்களது தோட்டங்களில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர்.

இதேபோல் சில இடங்களில் தேங்காய்கள் விற்காமல் தேக்கம் அடைந்துள்ளன. எனவே தேங்காய்களை மதிப்புக்கூட்டும் வகையில், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வத்தலக்குண்டுவை சேர்ந்த தென்னை விவசாயி மணி கூறுகையில், தற்போதைய சூழலில் மற்ற பொருட்களின் விலை ஏறிக்கொண்டே இருக்கும் நிலையில் தேங்காய் விலை மட்டும் ஏறாமல் அப்படியே உள்ளது. தென்னை மரங்களை பராமரிக்க அதிக அளவு செலவாகிறது. மரத்தில் இருந்து தேங்காய்களை பறிக்க கூலி கொடுக்க வேண்டும். செலவு ஏறிக்கொண்டே இருக்கும் நிலையில், விலை குறைந்து இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை