சென்னை
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடி முறைகேடாக ஒப்பந்தம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களில் சோதனை செய்தனர்.
கோவை பீளமேட்டில் கே.சி.பி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்றாவது தளத்தில் உள்ள அலுவலகத்தில்
அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.