தமிழக செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம் - சென்னையில் 3வது முறையாக சோதனை

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பா? என சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

தினத்தந்தி

கோவை,

கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந்தேதி அதிகாலை 4.10 மணியளவில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் (வயது 28 )என்பவர் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

கார் வெடிப்பு சம்பவத்தின் முழு பின்னணி தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தொடர் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னையிலும் மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் 3வது முறையாக போலீசார் சோதனை நடத்தினர்.ஓட்டேரி எஸ்.எஸ் புரம், வேப்பேரி நெடுஞ்சாலை, ஏழு கிணறு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பா? என சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்