தமிழக செய்திகள்

கோவை கார் வெடி விபத்து எதிரொலி - சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

கோவை கார் வெடி விபத்து எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கோவையில் இன்று காலை காரில் எடுத்து சென்ற 2 சிலிண்டர்களில் ஒரு சிலிண்டா வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் வந்த நபர் உயிரிழந்தா. இந்த விபத்து குறித்து போலீசா தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை கார் வெடி விபத்து எதிரொலியாக சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு 3 அடுக்கிலிருந்து 5 அடுக்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. விமானநிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களையும் கண்காணித்து, சந்தேகப்படும் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனா.

மேலும் கூடுதலாக வெடிகுண்டு நிபுணாகள் மோப்ப நாய்களுடன் வரவழைக்கப்பட்டு, பயணிகளின் உடமைகள், கா பாக்கிங் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி மத்திய தொழில் பாதுகாப்புபடையினருக்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்