தமிழக செய்திகள்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு

கோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

கோவை,

கோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 2-வது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் மாணவி லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்துவிட்டார். மாணவி குதிப்பதற்கு முன்னதாக பயிற்சியாளர் அவரை கீழே தள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மாணவி எதிர்பாராத விதமாக சன்ஷேடில் மோதி கீழே விழுந்தார். அவருடைய தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்