தமிழக செய்திகள்

கோவை ஊராட்சி மன்ற தலைவர் விவகாரம்: இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லையா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

கோவை ஊராட்சி மன்ற தலைவர் விவகாரத்தில் இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லையா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

கோவை மாவட்டம் ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா, கடந்த 21 ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னை அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியம் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் , சாதிய தீண்டமையுடன் நடத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியம் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் நெகமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எஸ்.சி எஸ் டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கோவை, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாகி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லையா?. சரிதாவுக்கு பாதுகாப்பு தந்து, மிரட்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்