தமிழக செய்திகள்

போலீசார் போல் பேசி ரூ.20 ஆயிரம் பறித்த கோவை வாலிபர் கைது

போலீசார் போல் பேசி ரூ.20 ஆயிரம் பறித்த கோவை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சியை சேர்ந்த ஒருவரை சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசிய அந்த நபர் தன்னை போலீஸ்காரர் என கூறி கொண்டார். மேலும், நீங்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளீர்கள். இது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இதற்காக உங்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய உள்ளோம் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அவர், வழக்கு எதுவும் பதிய வேண்டாம் என கேட்டுகொண்டுள்ளார். உடனே மர்ம நபர், அப்படியானால் தனது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தும்படி கூறி உள்ளார். இதை நம்பி அவர் முதல் தவணையாக ரூ.5 ஆயிரமும், அடுத்த தவணையாக ரூ.15 ஆயிரத்து 600 என ரூ.20 ஆயிரத்து 600-ஐ குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் பாதிக்கப்பட்ட நபர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் வழக்குப்பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வந்தனர். பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரணை செய்ததில், போலீசார் போல் நடித்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் கோவை வடவள்ளியை சேர்ந்த அசோக் (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அங்கு சென்று, அவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை சைபர்கிரைம் போலீசார் தேடி வருகிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை