தமிழக செய்திகள்

கருணாநிதி பிறந்தநாள் விழா: நாமக்கல்லில் கலெக்டர் ஸ்ரேயா சிங் மரக்கன்றுகள் நட்டார்

கருணாநிதி பிறந்தநாள் விழா: நாமக்கல்லில் கலெக்டர் ஸ்ரேயா சிங் மரக்கன்றுகள் நட்டார்

தினத்தந்தி

நாமக்கல்:

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வனத்துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து கலெக்டர் ஸ்ரேயா சிங் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் சிவகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்