தமிழக செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

புதுப்பாளையம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

செங்கம்

புதுப்பாளையம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பேரூராட்சிக்கு கலெக்டர் பா.முருகேஷ் வந்தார். இங்கு பூங்காவில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார், செயல் அலுவலர் உஸ்னாபி, தலைமை எழுத்தர் ரமேஷ் உள்பட பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.