தமிழக செய்திகள்

மாணவர் விடுதி, ரேஷன் கடை, அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு

மாணவர் விடுதி, ரேஷன் கடை, அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் லால்குடி வருகை தந்தார். பின்னர் அவர் லால்குடி அருகே புதூர் உத்தமனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மருந்து இருப்பு மற்றும் பணியாளர்களின் விவரம் உள்ளிட்ட பதிவுகளை ஆய்வு செய்தார். பின்னர் லால்குடி அரசு பிற்படுத்தப்பட்டோர் பள்ளியின் மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உணவுப் பொருட்களின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வுசெய்தார். மேலும் மாணவர்களிடம் சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுகிறதா? என கேட்டு அறிந்தார். பின்னர் பெருவெள்ளநல்லூரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் தரமாக, சரியான எடையில் வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். அதன்பின் அங்குள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் முட்டை குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்