தமிழக செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

நெல்லிக்குப்பம் அருகே வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம் பகுதியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பி.என்.பாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சார்பில் கதிர் அடிக்கும் நெற்களம் அமைக்கும் பணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நொறுக்குத்தீனி உற்பத்தி செய்யும் இடத்தையும், அங்கு விற்பனை செய்யும் பொருட்கள் தரமாக உள்ளதா? என்பது குறித்தும் கலெக்டர் பார்வையிட்டார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர்(பொறுப்பு) தணிகாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, அயற்கண்ணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு