தமிழக செய்திகள்

ஸ்ரீமுஷ்ணத்தில் வளாச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணத்தில் வளாச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தா.

தினத்தந்தி

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் மேலப்பாளையூரில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டா அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் தொழூர் மற்றும் தேவங்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகள், சி.கீரனூரில் கட்டப்பட்டு வரும் பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்குமாறு அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார். முன்னதாக ஸ்ரீமுஷ்ணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஆய்வு செய்த, கலெக்டர் அருண்தம்புராஜ், கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் கூடியிருந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின்னர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், விமலா, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் உள்பட பலர் உடனிருந்தனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்