தமிழக செய்திகள்

நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சேவையை டாக்டர்கள் வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்

நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சேவையை டாக்டர்கள் வழங்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் கற்பகம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவு தயாரிப்பு கூடத்திற்கு சென்று கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் கூறுகையில், மருத்துவமனையில் போதிய அளவில் குடிநீர் வசதி, கூடுதல் கழிவறை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விபத்து மற்றும் அவசர காலத்தில் வருபவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிறப்பான மருத்துவ சேவைகள் வழங்க வேண்டும், என்றார். ஆய்வின்போது மருத்துவமனையின் இருக்கை அலுவலர் டாக்டர் சரவணன், தேசிய சுகாதார திட்ட டாக்டர் அன்பரசு மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை