கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

மதுரையில் மூன்று நாட்கள் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு...!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.

தினத்தந்தி

மதுரை,

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றதாகும்.

அந்த வகையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே நாளை(15-ம் தேதி) மற்றும் 16,17-ம் தேதிகளில் நடைபெறுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் நாளை மற்றும் 16, 17-ம் தேதிகளில் மதுக்கடைகளை மூட கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து