தமிழக செய்திகள்

பள்ளி மாணவ, மாணவிகள் சீருடைகளில் கலெக்டரிம் மனு - தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மனு அளிக்க வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிப்பது வழக்கம். இந்த நிலையில் சமீப காலமாக குறைதீர் கூட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் சீருடைகள் அணிந்து வந்து கலெக்டரிடம் மனு அளிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், புதுக்கோட்டையில் குறைதீர் கூட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் சீருடைகள் அணிந்து வந்து கலெக்டரிடம் மனு அளிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.

மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இனியும் பள்ளி மாணவ, மாணவிகள் சீருடையுடன் மனு அளிக்க வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்