தமிழக செய்திகள்

கல்லூரி சந்தை நிகழ்ச்சி

நாகையில் கல்லூரி சந்தை நிகழ்ச்சி

நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் முன்னிலை வகித்தார். இந்த கல்லூரி சந்தையில் மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், சணல் பைகள், செயற்கை ஆபரண பொருட்கள், இயற்கை மூலிகைப் பொருட்கள், மாணவ- மாணவிகளால் உருவாக்கப்பட்ட கைவினைப்பொருட்கள், உணவுப் பொருட்கள் இடம் பெற்றிருந்தன. இதை கலெக்டர் பார்வையிட்டார். இதில் உதவி திட்ட அலுவலர்கள் காமராஜ், முருகேசன், வேல், கல்லூரி முதல்வர் அன்புசெல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.