தமிழக செய்திகள்

கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

குளச்சல், 

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவர்

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள குறும்பனை வயல்காலனியை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (வயது53). கேரளாவில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மகன் அஜேஸ்குமார் (18). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டில் சேர்ந்தார். அங்கு ஒரு மாதம் வகுப்பிற்கு சென்ற பின்பு, படிக்க விருப்பமில்லாமல் ஊருக்கு திரும்பினார். பின்னர் கடலில் மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்று வந்தார். இதற்கிடையே அஜேஸ்குமார் புதிய மோட்டார் சக்கிள் வாங்கி தரும்படி தாயாரிடம் கேட்டுள்ளார். அதற்கு, 'கேரளாவில் வேலக்கு சென்றுள்ள தந்தை மைக்கேல்ராஜ் 2 நாளில் ஊருக்கு வந்தவுடன் வாங்கி தரலாம்' என தாயார் கூறினார்.

தூக்குப்போட்டு தற்கொலை

ஆனால், மோட்டார் சைக்கிள் கிடைக்காததால் அஜேஸ்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் அஜேஸ்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தாயார் ரெஜின் ஜெனட் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்