தமிழக செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

நெல்லை அருகே ராஜவல்லிபுரம் கட்டாம்புதூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு சோனியா (வயது 19) என்ற மகளும், ஒரு மகனும் உண்டு. சோனியா, நெல்லை பேட்டையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களாக வீட்டில் இருந்தவர்களிடம் சரிவர பேசாமல் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் சோனியா வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே விளையாட சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய சோனியாவின் தம்பி தனது அக்காள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதான். தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தான்.

இதுகுறித்து சீவலப்பேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சானியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சோனியா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை