தமிழக செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

புதுக்கடை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

புதுக்கடை:

புதுக்கடை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பார்த்திபபுரம் சடச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார், கொத்தனார். இவருடைய மகள் ஜெயஸ்ரீ (வயது 25), தொலையாவட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் ஜெயஸ்ரீயின் தாயார் அருகில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் அவர் வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டில் கண்ட காட்சியை பார்த்து துடிதுடித்து போனார். அதாவது அங்குள்ள அறையில் ஜெயஸ்ரீ தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

தற்கொலை

உடனே ஜெயஸ்ரீயின் தாயார் கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஜெயஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனை கேள்விபட்டதும் குடும்பத்தினர் ஜெயஸ்ரீ உடலை பார்த்து கதறி அழுதனர். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. பின்னர் இதுபற்றி ஜெயஸ்ரீயின் தம்பி ஸ்ரீநாத் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு