கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

சென்னை: 7-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை

மாணவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

தினத்தந்தி

சென்னை ராயப்பேட்டை மாசில்லாமணி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆதித்யா சச்சின். இவர் கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருடைய தந்தை அண்ணாசாலையில் உதிரிபாகங்கள் விற்கும் கடையை நடத்தி வருகிறார். சச்சின் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் இதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று கல்லூரி முடிந்து வீடு திரும்பிய சச்சின், அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 7-வது மாடிக்கு யோகாசனம் செய்ய சென்றார். அப்போது திடீரென அங்கிருந்து கீழே குதித்துவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ராயப்பேட்டை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்