தமிழக செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே 7-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை - சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி அருகே 7-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

டெல்லியை சேர்ந்தவர் ஆயுஷ் யாதவ் (வயது 23). இவர் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் தங்கியிருக்கும் சக கல்லூரி மாணவர்களுடன் ஆயுஷ் யாதவ் பேசிகொண்டு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென 7-வது மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த ஆயுஷ் யாதவ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஆயுஷ் யாதவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆயுஷ் யாதவ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருக்கும் சக கல்லூரி மாணவர்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு