தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி கல்லூரி மாணவி சாவு - தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்

கும்மிடிப்பூண்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தபால் தெருவை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சந்தியா (வயது 22). சென்னையில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் கும்மிடிப்பூண்டி - சென்னை சென்டிரல் ரெயில் மார்க்கத்தில் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக சந்தியா மீது அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜீ தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி