தமிழக செய்திகள்

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

மலைக்கோட்டை:

கல்லூரி மாணவர்

திருச்சி கீழப்புதூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்(வயது 19). இவர் காட்டூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சண்முகவேல் நேற்று மதியம் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து திருச்சி ஓயாமரி அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.

ஆற்றில் குளித்தபோது சண்முகவேல் தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி தீயணைப்பு வீரர்கள், அங்கு சென்று ஆற்றில் மூழ்கிய சண்முகவேலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பிணமாக மீட்பு

அப்போது சண்முகவேலை பிணமாக மீட்டனர். இதையடுத்து சண்முகவேலின் உடலை கோட்டை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து