தமிழக செய்திகள்

பிறந்தநாளில் பாலாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

பிறந்தநாளில் பாலாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் அருகே பிள்ளையார் பாளையம், திருமலைராஜன் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராம் (வயது 19). பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை முன்னிட்டு அதே கல்லூரியில் படிக்கும் சக நண்பர்களுடன் ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட இருங்குன்றம் பள்ளி பம்ப் ஹவுஸ் அருகில் உள்ள பாலாற்றில் நண்பர்களுடன் குளிக்கச்சென்றார். அப்போது ஆழமானப் பகுதிக்கு மோகன்ராம் சென்றதால் நீச்சல் தெரியாமல் திணறினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்ற நிலையில் நீரில் மூழ்கி மோகன்ராம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு