தமிழக செய்திகள்

கல்குவாரி குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு - நீச்சல் தெரியாமல் தெர்மாகோல் உதவியுடன் குளித்தபோது பரிதாபம்

நீச்சல் தெரியாமல் தெர்மாகோல் உதவியுடன் கல்குவாரி குட்டையில் குளித்த கல்லூரி மாணவர், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் தேவசாமிநாதன். இவருடைய மகன் தினேஷ்தேவா (வயது 23). இவர், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிப்பதற்கு சென்றார். நீச்சல் தெரியாத தினேஷ்தேவா, தெர்மாகோல் உதவியுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கல்குவாரி குட்டையில் மூழ்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியாததால் மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கல்குவாரி குட்டையில் மூழ்கிய தினேஷ் தேவாவை தேடினர். அதற்குள் இருள் சூழந்து விட்டதால் தடும் பணியை நிறுத்தினர்.

நேற்று கால மீண்டும் கல்குவாரி குட்டையில் தினேஷ்தேவாவை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு தினேஷ்தேவாவை பிணமாக மீட்டனர். போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு