தமிழக செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

திருவேற்காட்டில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கல்லூரி மாணவி தற்கொலை

திருவேற்காடு, கருமாரியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஸ்ரீநிதி (வயது 19) என்ற மகளும் இருந்தார். அவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் உமா எழுந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள மற்றொரு அறையில் மகள் ஸ்ரீநிதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த திருவேற்காடு போலீசார், ஸ்ரீநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி ஸ்ரீநிதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாணவி ஸ்ரீநிதியின் பெற்றோர், திருவேற்காடு போலீஸ் நிலையம் அருகே நிருபர்களிடம் கூறியதாவது:-

2 பவுன் நகை

நாங்கள் ஏற்கனவே திருவேற்காடு, சிவசங்கர் நகர் பகுதியில் வினோத்-ரேவதி தம்பதியரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தோம். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக ரேவதியிடம் இருந்து 2 பவுன் நகையை வாங்கி அடகு வைத்து பணம் வாங்கினேன். இதற்கிடையில் அந்த வீட்டை காலி செய்துவிட்டு, இந்த வீட்டுக்கு குடியேறி வந்துவிட்டோம்.

இந்தநிலையில் வினோத், தனது மனைவியிடம் இருந்து நாங்கள் 7 பவுன் நகை வாங்கிவிட்டு திருப்பி தரமறுப்பதாக திருவேற்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் எங்களை குடும்பத்தோடு போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த புகாரில் தனது குடும்பத்தினரை போலீசார் கைது செய்து விடுவார்களோ?என்ற அச்சத்தில் எனது மகள் ஸ்ரீநிதி இருந்து வந்தாள். அதில் ஏற்பட்ட மனஉளைச்சலில்தான் அவள் தற்கொலை செய்திருக்கலாம்.

தற்கொலைக்கு முன்பாக எங்கள் தரப்பு நியாயத்தை போலீஸ் அதிகாரி ஒருவரிடம் எனது மகள் செல்போனில் தெரிவித்தாள். எனது மகள் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். எனது மகள் பேசிய போலீஸ் அதிகாரி யார்? என்பது குறித்து விசாரிக்க வேண்டும். எனது மகள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி