தமிழக செய்திகள்

கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து படுகொலை

நாட்டறம்பள்ளி அருகே பட்டப்பகலில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தாய்மாமனை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

கல்லூரி மாணவி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா (வயது 18). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். ஜீவிதாவின் தாய் ஜெயப்பிரதாவின் தம்பி சரண்ராஜ் (35). திருப்பத்தூரை அடுத்த சின்னகசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த இவர் புகைப்பட கலைஞர் மற்றும் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.

மாணவி ஜீவிதாவும், சரண்ராஜும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரண்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என தெரியவந்ததால் ஜீவிதாவை, சரண்ராஜ்க்கு திருமணம் செய்து வைக்க மாணவியின் தாய் ஜெயப்பிரதா மறுத்துள்ளார்.

கழுத்தை அறுத்து படுகொலை

இதனால் கடந்த ஒரு வாரமாக சரண்ராஜ், ஜீவிதாவை பின் தொடர்ந்து உள்ளார். ஆனால் ஜீவிதா அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ் நேற்று விடுமுறையில் வீட்டில் தனியாக இருந்த ஜீவிதாவின் வாயில் துணியை வைத்து அடைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். பின்னர் அவரது செல்போனையும், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று உள்ளார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜீவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொள்வதாக கடிதம்

மேலும் சரண்ராஜ் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் அன்புள்ள அக்கா, மாமா, அப்பா, அம்மா அவர்களுக்கு சரண்ராஜ் எழுதுவது, நானும், ஜீவிதாவும் நான்கு வருடம் காதலித்தோம். கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் முடியவில்லை. அதனால் இந்த முடிவுக்கு வந்து விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள். இப்படிக்கு சரண்ராஜ், ஜீவிதா என்று எழுதியிருந்தார்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு