தமிழக செய்திகள்

சிகிச்சையின்போது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; 70 வயது டாக்டர் கைது

சிகிச்சையின்போது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது டாக்டர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சேதுபதிநகரை சேர்ந்தவர், ஜபருல்லாகான் (வயது 70). இவர் ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரின் கிளினிக்கிற்கு 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

சிகிச்சையின்போது அவருக்கு டாக்டர் ஜபருல்லாகான் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தன் தாயாரிடம் கூறியதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கைது

ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜபருல்லாகானை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவரை ராமநாதபுரம் கோர்ட்டில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது டாக்டர் ஜபருல்லாகான் திடீரென கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்து அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து போலீஸ் காவலில் சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது