தமிழக செய்திகள்

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - சென்னையில் பரபரப்பு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து மாநகர பஸ் ஒன்று நேற்று முன்தினம் மாலை புரசைவாக்கம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த பஸ்சில் கல்லூரி மாணவி ஒருவர் பயணித்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மாணவியிடம் வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

பஸ் கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வரும் போது திடீரென மாணவி கூச்சலிட்டார். வாலிபருக்கும் பளார் என அறைவிட்டார். உடனே மற்ற பயணிகளும் சேர்ந்து வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர், பஸ்சை நிறுத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கீழ்ப்பாக்கம் போலீசார் குறிப்பிட்ட வாலிபரை கைது செய்தனர்.

அந்த வாலிபர், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராமு (வயது 25) என்பதும், ஓட்டேரியில் நண்பருடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. நீதிமன்ற காவலில் அந்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து