தமிழக செய்திகள்

கல்லூரி மாணவர்களை தாக்கி அரசு பஸ்சின் கண்ணாடி உடைப்பு

மன்னார்குடி அருகே மாணவர்களை தாக்கி அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து நேற்று முன்தினம் மாலை ரிஷியூர் நோக்கி அரசு நகர பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் முரளி (வயது42) ஓட்டிச்சென்றார். கண்டக்டராக திருமால் முருகன் (50) பணியில் இருந்தார். பஸ் மன்னார்குடி அருகே பாமணி நாகநாதசாமி கோவில் நிறுத்தத்தில் நின்றது. அப்போது பஸ்சில் ஏறிய 3 பேர், பஸ்சில் பயணம் செய்த பாமணி செருமங்கலம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஹரிஷ்குமார் (18), முகேஷ் (18) ஆகியோரை தாக்கி விட்டு கீழே இறங்கி விட்டனர்.

பின்னர் கல்லால் பஸ்சின் பின்புற கண்ணாடியை உடைத்தனர். இதையடுத்து பஸ் டிரைவர் முரளி பஸ்சை மன்னார்குடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்று அங்கு புகார் அளித்தார்.

3 பேர் கைது

அதன்பேரில் மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக பாமணி பகுதியை சேர்ந்த அஜய்குமார் (19), ஆதிநிதி (18), பிரகாஷ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...