தமிழக செய்திகள்

கல்லூரி மாணவர்களை கத்திமுனையில் மிரட்டி செல்போன்கள் பறிப்பு

காட்டாங்கொளத்தூரில் உள்ள கல்லூரி மாணவர்கள் அறையில் புகுந்த மர்ம நபர்கள் கத்திமுனையில் மிரட்டி அவர்கள் வைத்திருந்த 4 செல்போன்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தினத்தந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேம்ஜித் (வயது 21), இவர் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சககல்லூரி நண்பர்களுடன் தங்கி காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்கள் அறையில் இருக்கும்போது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கத்திமுனையில் மிரட்டி அவர்கள் வைத்திருந்த 4 செல்போன்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்