தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி

திருமக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விவசாயி பலியானார்.

தினத்தந்தி

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை அருகே தென்பரை வடக்கு தெருவை சேர்ந்த சேகர் (வயது60). விவசாயி. இவர் மன்னார்குடி சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் தென்பரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது இடைநத்தம் கிராமத்தில் இருந்து தென்பாதி மெயின் ரோட்டை சேர்ந்த ராஜசேகர் மகன் நவீன் (19) என்பவர் மோட்டார் சைக்கிளில் மன்னார்குடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இடையர் நத்தம் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த நவீன் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பக்டர் தேவதாஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புனித குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை