தமிழக செய்திகள்

விக்கிரவாண்டி அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி3 பேர் படுகாயம்

விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

தினத்தந்தி

விக்கிரவாண்டி, 

திண்டிவனம் அருகே உள்ள பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 21). இவர் நேற்று மாலை நண்பரான அதேஊரை சேர்ந்த நவீன்(24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ரெட்டணைக்கு புறப்பட்டார். ரெட்டணை கடைவீதியில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி, அவ்வழியாக வந்த பாதசாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்ரீகாந்த், நவீன் மற்றும் எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முப்புளியை சேர்ந்த அருள் ரஜினி(45), சாலையில் நடந்து வந்த அம்மன்குளத்துமேட்டை சேர்ந்த சுகுமார்(30) ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீகாந்த் பரிதாபமாக இறந்து விட்டார். மற்ற 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்