தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

விளாத்திகுளம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் பயணம்

விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கு செட்டியார் மகன் சரவணன் (வயது 31). இவரும், விளாத்திகுளம் அருகே உள்ள புதூரை சேர்ந்த மாரி கண்ணன் மகன் சக்தி என்பவரும் நேற்று முன்தினம் இரவு நாகலாபுரத்தில் இருந்து சிவலார்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வடக்கு முத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜ குருநாதன் என்பவரின் மகன் விக்னேஷ் (17) மற்றும் கண்ணன் மகன் சரவணன் (20) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வடக்கு முத்தையாபுரம் கிராமத்திலிருந்து புதூருக்கு வந்து கொண்டிருந்தனர்.

விபத்து

புதூர் தனியார் மஹால் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் 3 பேர் படுகாயம்

மேலும் பலத்த காயங்களுடன் இருந்த விக்னேஷ், மற்றொரு சரவணன், சக்தி ஆகிய 3 பேரும் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்