தமிழக செய்திகள்

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய குழு அமைப்பு - தமிழக அரசு

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தமிழக பொது விநியாகத் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு, விரல் ரேகை சரிபார்ப்பு தொழில்நுட்பம் மூலம் கார்டுதாரர்களின் விவரம் சரிபார்க்கப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த குழு அனைத்து மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்