தமிழக செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சீர்காழி:

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய மகளிர் அணி தலைவர் இந்திரா காந்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மணிப்பூர் மாநிலத்தில் பெண்ளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நீதி சோழன், கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை