தமிழக செய்திகள்

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு நேற்று பாண்டவர்மங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கரும்பன், மாவட்ட பஞ்சாலை தொழிற் சங்க தலைவர் பரமராஜ், நகர செயலாளர்

சரோஜா, தாலுகா உதவி செயலாளர் சுரேஷ், நகர உதவி செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன் மற்றும் பாண்டவர்மங்கலம் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராஜேஷ் குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இந்தமனுவை பெற்றுக் கொண்ட பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு