தமிழக செய்திகள்

கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் விரைவில் நலன் பெற விழைகிறேன்; தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் விரைவில் நலன் பெற்று, மக்கள் தொண்டினை தொடர விழைகிறேன் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறுநீரக பாதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறுநீரகம் மற்றும் ரத்தம் அழுத்தம் தொடர்பான சிகிச்சைகள் தொடர்ந்து அளித்து வரும் நிலையில் இன்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறுநீரக பிரச்சனையினால் கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடைபெற்று வருகிறது. நேற்று திடீரென்று சிறுநீரக பாதிப்பு அதிகமானதால் ராஜீவ்காந்தி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் விரைந்து நலன் பெற்று மக்கள் தொண்டினை தொடர விழைகிறேன் என தெரிவித்து உள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு