தமிழக செய்திகள்

சமுதாய வளைகாப்பு விழா

பாளையங்கோட்டையில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

பாளையங்கோட்டை:

பாளையங்கோட்டை மாநகராட்சி அருண்ஸ் மஹாலில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களும், சத்தான உணவு பொருட்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் சரோஜா, கவுன்சிலர்கள் அனுராதா சங்கரபாண்டியன், சீதா பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT