தமிழக செய்திகள்

100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

குடியாத்தத்தில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

குடியாத்தத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை குடியாத்தம் வட்டாரம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரிஹானா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.பி.சக்திதாசன், கே.ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.சதீஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு ஊட்டச்சத்து நிறைந்த கல்வியில் சிறந்த வலிமையான பாரதத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100 கர்ப்பிணிகளுக்கு புடவை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள். ஒன்றிய தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...