சென்னை,
நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.
கார், வேன், பேருந்துகள் அதிக அளவில் பெருங்களத்தூர் வழியாக செல்வதாலும், ஏராளமான பயணிகள் அங்கு நின்று செல்லும் பேருந்துகளில் ஏறி செல்வதாலும் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, வண்டலூரை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு அதிக அளவு வழியை போக்குவரத்து காவல் துறையினர் சீர்படுத்தியிருந்தாலும் அதிக வாகனங்கள் கடந்து செல்வதால் நெரிசல் காணப்பட்டு வருகிறது.
அதேபோல் சென்னையை நோக்கி வாகனங்களும் நெரிசலில் சிக்கியுள்ளது. பெருகளத்தூரில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக வண்டலூர் வரை ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்துள்ளன.