தமிழக செய்திகள்

நில அபகரிப்புக்கு எதிரான புகார் - பதிவுத்துறை ஐ.ஜி.-க்கு ஐகோர்ட் கண்டனம்

நில அபகரிப்புக்கு எதிரான புகார் மீது ஓராண்டாக நடவடிக்கை எடுக்காத ஐ.ஜி.-க்கு, சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவர், குமாரப்பாளையம் கிராமத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அபகரித்துள்ளதாகவும், இதற்கு கோவை மாவட்ட பதிவாளர் சுரேஷ்குமார், சார்பாதிவாளர் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு கடந்த ஆண்டு புகார் அனுப்பியிருந்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆனதால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நாராயணசாமி கொடுத்த புகார் கடந்த ஆண்டு மே மாதம், பதிவுத்துறை ஐ.ஜி.-க்கு அனுப்பி வைகப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஓராண்டாக நடவடிக்கை எடுக்காத பதிவுத்துறை ஐ.ஜி.-க்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இது குறித்து ஜூலை 7-ந்தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்